சக்ரா படத்தை ஒடிடி தளங்களில் வெளியிடும் விவகாரம் - நடிகர் விஷாலுக்கு பைனான்சியர் நோட்டீஸ்

சக்ரா படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு தர வேண்டிய 58 லட்சத்து 35 ஆயிரத்தை செலுத்துமாறு பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் நடிகர் விஷாலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சக்ரா படத்தை ஒடிடி தளங்களில் வெளியிடும் விவகாரம் - நடிகர் விஷாலுக்கு பைனான்சியர் நோட்டீஸ்
x
கடந்த 2008 ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  விஷால் பைனான்சியர் விஜய் கோத்தாரி என்பவரிடம் 50 லட்ச ரூபாய் கடனாக வாங்கியிருந்தார்.

விஷால் பணத்தை தராமல் தொடர்ந்து இழுத்தடித்த நிலையில், பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 50 லட்ச ரூபாயை 9 சதவீத வட்டியுடன் பைனான்சியருக்கு செலுத்துமாறு கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் விஷாலுக்கு உத்தரவிட்டது.

 நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வருடம் ஆகியும் விஷால் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. 

விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா என்ற படம், ஒடிடி  தளத்தில் வெளியாக உள்ள நிலையில்,  பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், படத்தை ஒடிடி தளங்களில் வெளியிடும் முன் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை விஷால் தரப்பு, வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்