நடிகர் ரஜினிக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை

அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அதில் நடித்து வந்த நடிகர் ரஜினிக்கு தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை
x
சிறுத்தை சிவ இயக்கத்தில் நடிகர் ரஜினி,  நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அண்ணாத்த. கொரோனாவால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  நிலையில், கடந்த 14ம் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. 

அண்ணாத்த படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்புகளை 15 நாட்களுக்கு நடந்த படக்குழு திட்டமிடிருந்ததாக தெரிகிறது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் படப்பிடிப்பை படக்குழு தற்காலிகமாக  நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே நடிகர் ரஜினிக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்