குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள் - அமலாபாலின் வேற லெவல் யோகா

நடிகை அமலாபால் வித்தியாசமான முறையில் யோகா செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள் - அமலாபாலின் வேற லெவல் யோகா
x
நடிகை அமலாபால் வித்தியாசமான முறையில் யோகா செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் நோக்கத்தில் கவனம் செலுத்துங்கள் என்ற கேப்சனுடன் அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

ஹன்சிகா மோத்வானியின் குதூகல குத்தாட்டம்

நடிகை ஹன்சிகா, ஜாலியாக ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக போதுமான படவாய்ப்புகள் இல்லாத‌தால், ஹன்சிகா மோத்வானி தினம்தோறும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள், புகைப்படங்களை பதிவேற்றி  வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்கலாம்.. 

மீண்டும் ஒரு புதிய உலகம் - என்ன ஒரு கதை... : கட்டாயம் பாருங்கள் - சூர்யா பரிந்துரைக்கும் படம்

இயக்குநர் சுதா கொங்கரா படைப்பில் உருவாகியுள்ள தங்கம் திரைப்படத்தை நடிகர் சூர்யா புகழ்ந்து தள்ளியுள்ளார். என்ன ஒரு கதை, மீண்டும் ஒரு புதிய உலகத்திற்கு அழைத்து செல்கிறது என அவர் தன் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இதேபோல, இயக்குநர் சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் ஷிவன், கவுதம் வாசுதேவ் மேன‌ன் இணைந்து உருவாக்கியுள்ள பாவக் கதைகள் என்ற படத்தையும் கட்டாயம் பார்க்க வேண்டும் என சூர்யா பரிந்துரைத்துள்ளார். இந்த படம் ஓடிடியில் இன்று வெளியாகிறது.  

ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் - வருகிறது புதிய சைக்கோ திரில்லர் மூவி

ஸ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் படத்திற்கு தீங்கிரை என பெயரிடப்பட்டுள்ளது. சஹானா ஸ்டுடியோஸ் சார்பில்  ஏ.கே.குமார் தயாரிக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநரான பிரகாஷ் இயக்குகிறார். கதாநாயகியாக அபூர்வா ராவும், முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும் நடிக்கின்றனர். சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படம், பெரும் பொருட் செலவில் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  

சூரியை ஏமாத்தாதிங்க - ரசிகனின் டுவிட் : பதில் அளித்த விஷ்ணு விஷால்

சூரியை ஏமாற்றாதீர்கள், நான் உங்கள் ரசிகன் ஆனால் சூரி விவகாரத்திற்கு பிறகு உங்களை வெறுக்கிறேன் என நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ரசிகர் ஒருவர் டுவிட் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்த விஷ்ணு, யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது விரைவில் தெரிய வரும், நம்பிக்கை துரோகம் சீக்கிரம் வெளிவரும் என பதில் அளித்துள்ளார். அதன் பிறகு நீங்கள் என்னை விரும்புவதா அல்லது வெறுப்பதா என முடிவு செய்யுங்கள் எனவும் விஷ்ணு விஷால் தன் ரசிகருக்கு பதில் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்