முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு - நடிகை அமலாபாலுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு - நடிகை அமலாபாலுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
x
மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் அமலாபாலுடன் எடுத்த புகைப்படம் சமூக வலை தளத்தில் வெளியாகியுள்ளது. சிறிது நேரத்தில் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் இருந்து அவற்றை நீக்கிவிட்டார். இதையடுத்து, பாடகர் பவ்னிந்தர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கோரி, நடிகை அமலபால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருமணமானதாக பவ்னிந்தர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பாடகர் பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்