காணொலி காட்சி மூலம் பாடம் நடத்திய நடிகர் சூரி

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் நகைச்சுவை நடிகர் சூரி பாடம் நடத்தினார்.
காணொலி காட்சி மூலம் பாடம் நடத்திய நடிகர் சூரி
x
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் நகைச்சுவை நடிகர் சூரி பாடம் நடத்தினார். பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டும் விதமாக சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடினார். கல்வியின் முக்கியத்துவம், விடா முயற்சி ஆகியவை குறித்து நகைச் சுவையாக அவர் பேசிய போது, மாணவர்களிடம் சிரிப்பலையும், குறும்பு கேள்விகளும் எழுந்தது. கலகலப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வை, அதிகாரிகளும் ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்