சர்ச்சைக்குள்ளான இணையதள தொடர் "காட் மேன்" - மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

பிரபல இணையதள தொடரான காட் மேன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சர்ச்சைக்குள்ளான இணையதள தொடர் காட் மேன் - மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
x
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் காட் மேன் என்னும் பெயரில் இணையதள தொடரை வரும் ஜூன் 12ஆம் தேதி ஒளிபரப்ப உள்ளதாக அந்த தொடரின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரை இளங்கோவன் என்பவர் தயாரிக்க, பாபு என்பவர் இயக்கியுள்ளார். இதில் டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த டீசர் காட்சி வெளியானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. டீஸரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானதாகவும் பாலுணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த இணையதள தொடரின் தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குனர் பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த இணையதள தொடரில் நடித்துள்ள நடிகர்கள் நடிகைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்