ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு - திங்கட்கிழமை தீர்ப்பு

பெரியார் பற்றி அவதூறு கருத்தை தெரிவித்த ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளது.
ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு - திங்கட்கிழமை தீர்ப்பு
x
திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி உமாபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவில், எந்த ஆதாரமும் இல்லாமல் அரசியல் லாபத்திற்காக பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவித்து, வன்முறையை தூண்டும் வகையில்  நடிகர் ரஜினி பேசியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த எழும்பூர் இரண்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை,  மனு மீதான தீர்ப்பை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்