ஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' திரைப்படம் : "மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர்" - எழுத்தாளர் அஜயன் பாலா குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' படத்தில் மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக எழுத்தாளர் அஜயன் பாலா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் தலைவி திரைப்படம் : மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர் - எழுத்தாளர் அஜயன் பாலா குற்றச்சாட்டு
x
ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில்  தலைவி  திரைப்படம் தயாராகி வருகிறது.  ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதா குறித்து தான் எழுதியுள்ள  நாவலை அடிப்படையாக வைத்து படம் உருவாகி வருவதாகவும்,  தற்போது  திரைப்படத்தில் உண்மைக்குப் புறம்பாக மறைந்த தலைவர்கள் சிலர் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எழுத்தாளர் அஜயன் பாலா தெரிவித்துள்ளார். அதை தான் தட்டிக் கேட்டதால் படத்தில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார். இயக்குநர் விஜய் தனது முதுகில் குத்தி விட்டதாகவும் அஜயன் பாலா முகநூல் பதிவில் வேதனை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்