"அரசியல் வேண்டாம் என நடிகர் அமிதாப் அறிவுரை" - நடிகர் ரஜினிகாந்த்

அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று தமக்கு நடிகர் அமிதாப் பச்சன் அறிவுரை கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
அரசியல் வேண்டாம் என நடிகர் அமிதாப் அறிவுரை - நடிகர் ரஜினிகாந்த்
x
தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினிகாந்த் , உடற்பயிற்சி செய்ய வேண்டும் ,  எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்ள வேண்டும் , அரசியலில் நுழையக் கூடாது என்ற மூன்று  விஷயங்களை கடைப்பிடிக்கும்படி நடிகர் அமிதாப் பச்சன் தமக்கு அறிவுரை வழங்கியதாக குறிப்பிட்டார் . அதில்  இரண்டு அறிவுரைகளை தாம் ஏற்றுக் கொண்டதாகவும் அரசியலுக்கு வர வேண்டாம் என்ற அறிவுரையை மட்டும் தாம் கடைபிடிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார் ..  திருநங்கை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்டநாள் ஆசை  என்றும்  ரஜினிகாந்த்  குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்