தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
x
சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பல்வேறு பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னை வடபழனியில் நடைபெற்றது. வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி சுமார் ஆயிரத்து 386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பொதுச்செயலாளராக ஆர்வி.உதயகுமாரும், பொருளாளராக பேரரசும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்