ஜூலை 21 - ல் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
ஜூலை 21 - ல் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
x
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதன்படி 2019 - 2021 ஆம் ஆண்டுக்கு தேர்தல் நடத்துவதற்கான முடிவு சங்கத்தின் 99-வது பொதுக் குழுவில் எடுக்கப்பட்டது. இதில் ஒருமனதாக  இயக்குனர் பாரதிராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களின் இறுதி பட்டியல் , நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,100-வது அவசரப் பொதுக்குழு வரும்  8 ஆம் தேதி  கூட்டப்பட்டு, ஜூலை 21 ஆம் தேதி சங்கத்திற்கான
தேர்தல் தேதியாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்