பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா காலமானார்

தமிழ்,தெலுங்கு சினிமாவில் கலக்கிய பழம் பெரும் நடிகை விஜய நிர்மலா காலமானார்.
பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா காலமானார்
x
தமிழ், தெலுங்கு சினிமாவில் கலக்கிய பழம் பெரும் நடிகை விஜய நிர்மலா காலமானார். அவருக்கு வயது 73. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில், வயது மூப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1960 மற்றும் 70களில் தமிழில் சோப்பு சீப்பு கண்ணாடி, எங்கள் வீட்டு பெண் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜய நிர்மலா. தமிழ்நாட்டில் பிறந்தாலும் அவர் முக்கியமாக தெலுங்கு சினிமாவில் நடிகை மற்றும் இயக்குனராக கலக்கியவர். ஒரு பெண் இயக்குனராக அதிக படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் இவர்.அவரது மறைவுக்கு திரைத் துறையினர், சினிமா பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்