திரைப்பட தயாரிப்பாளர் சங்க சொத்துக்களை நிர்வகிக்க அதிகாரி - நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சில தயாரிப்பாளர்கள் சார்பில் பதிவு துறையில் புகார் அளிக்கப்பட்டது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்க சொத்துக்களை நிர்வகிக்க அதிகாரி -  நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
x
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சில தயாரிப்பாளர்கள் சார்பில் பதிவு துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர்  சங்கத்தின் அறிக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்பதால் பதிவாளர் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்தின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக சேகர் என்பவரை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்