இணையத்தில் வெளியானது 'தர்பார்' புகைப்படங்கள்

இணையதளத்தில் ரஜினிகாந்த், நயன்தாராவின் 'தர்பார்' பட காட்சிகள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இணையத்தில் வெளியானது தர்பார் புகைப்படங்கள்
x
இணையதளத்தில் ரஜினிகாந்த், நயன்தாராவின் 'தர்பார்' பட காட்சிகள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 'தர்பார்' படத்துக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தார். 

படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி ரஜினிகாந்தின் தோற்றங்களை ரகசியமாக படம்பிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

இந்நிலையில், ரஜினிகாந்தும் யோகிபாபுவும் நடித்த காட்சி, ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வரும் காட்சிகள் போன்றவற்றை செல்போனில் படம் எடுத்து இணையதளங்களில் கசிய விட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்