வனிதா விஜயகுமாரை வீட்டை விட்டு வெளியேற்றிய போலீசார்...

நடிகை வனிதா விஜயகுமாரை சென்னை மதுரவாயல் வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றினர்.
வனிதா விஜயகுமாரை வீட்டை விட்டு வெளியேற்றிய போலீசார்...
x
சென்னை மதுரவாயல் வீட்டில் இருந்த நடிகை வனிதா விஜயகுமாரை போலீசார் வெளியேற்றினர்.  மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் படப்பிடிப்புக்காக வந்த வனிதா அதன்பிறகு வீட்டை விட்டு வெளியேறவில்லை. இதுதொடர்பாக விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் வனிதா விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இந்த நிலையில் தனக்கு பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வனிதா வழக்கு தொடர்ந்திருந்தார். அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில் நேற்று அவர் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனால் அந்த வீட்டில் வசிக்க உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என கூறி காவல்துறையினர் வனிதாவை வீட்டை விட்டு வெளியேற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்