எப்படி இருக்கிறது திமிரு பிடிச்சவன் ?

விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், சாய் தீனா, லட்சுமி ராமகிருஷ்ணன் ,சிந்துஜா திருநங்கை மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் "திமிரு பிடிச்சவன்"
எப்படி இருக்கிறது திமிரு பிடிச்சவன் ?
x
விருதுநகரில் இருந்து வரும் முருகவேல் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் போஸ்டிங் கிடைத்த முருகவேலுக்கு, தனது சகோதரர் பத்மாவிடம்(சாய் தீனா) வேலை செய்து சின்ன சின்ன குற்றங்கள் செய்து வருவது தெரிய வருகிறது.


ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் தனது சகோதரரை கொலை செய்து விடுகிறார். மேலும் இந்த நகரில் பத்மாவால் மக்கள் அவதி பட்டு வருவதை தடுக்கும் முயற்சியில் பெண் சப் இன்ஸ்பெக்டர் மடோனா (நிவேதா பொத்ராஜ்) உடன் இணைந்து இறங்குகிறார். இந்த முயற்சியில் இவர் வெற்றி பெற்று பத்மாவிடம் இருந்து இளைய தலைமுறையினரை விடுவித்தாரா?  என்பது தான் கதை. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை மற்றும் படத்தில் உள்ள சோஷியல் மெசேஜ் மிகவும் நன்றாக உள்ளது. 

சென்னை தமிழில் பேசுவதும் ,புல்லட் பைக் ஓட்டுவதும், விஜய் ஆண்டனியை காதலிக்கும் காட்சிகளிலும் சரி நடிப்பில் நிவேதா பெத்துராஜ் அசத்தியுள்ளார். திருநங்கை சிந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சாய் தினா மிரட்டியுள்ளார்.

இரண்டாவது பாதியில் இருக்கும் வேகம் முதல் பாதியில் குறைவாகத்தான் உள்ளது.படத்தின் திரைக்கதை வலுவாக இல்லாததால் "திமிரு பிடிச்சவனின்” ஆக்ரோஷம் சற்று குறைவு என்றே கூறலாம்.

Next Story

மேலும் செய்திகள்