மாணவர்களுடன் இணைந்து விமானத்தை இயக்கிய நடிகர் அஜித்

மாணவர்களுடன் இணைந்து விமானத்தை இயக்கிய நடிகர் அஜித்
மாணவர்களுடன் இணைந்து விமானத்தை இயக்கிய நடிகர் அஜித்
x
சென்னை எம்ஐடியில் ஆளில்லா விமானத்தை இயக்கி, நடிகர் அஜித் சோதனை செய்தார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள எம்.ஐ.டி.யில் உலகத்தரத்தில் UAV எனப்படும் ஆளில்லா விமானங்கள் உருவாக்கும் பணியை "தக்‌ஷா" என்ற குழு செய்து வருகிறது. இந்தக் குழுவில் அண்ணா பல்கலைகழக எம்.ஐ.டி. ஏரோநாட்டிகல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளனர். ஆளில்லா விமானங்களை இயக்குவதில் கைதேர்ந்த நடிகர் அஜித், இந்த குழுவின் ஆலோசகராகவும், ஆளில்லா விமானங்களை இயக்கும் சோதனை விமானியாகவும் உள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித்,  தக்‌ஷா குழுவினர் உருவாக்கியுள்ள பல்வேறு தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆளில்லா விமானத்தை குரோம்பேட்டை எம்ஐடி மைதானத்தில் இயக்கி சோதனை செய்தார். அப்போது மாணவர்கள்  கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் மாணவர்களுடன் அஜித்  செல்பி எடுத்துக்கொண்டார்.
Next Story

மேலும் செய்திகள்