விஜய் படங்கள் - தொடரும் பிரச்சினைகள்

நடிகர் விஜயின் படங்களும், பிரச்சனைகளும் பிரிக்க முடியாதவையாகி விட்டன... அழகிய தமிழ்மகனில் தொடங்கிய சர்ச்சை சர்கார் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
விஜய் படங்கள் - தொடரும் பிரச்சினைகள்
x
நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜயின் படங்கள் பிரச்சனைகளை சந்திப்பதென்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.. பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் படம் வெளியாகிவிட்டால் பலர் ஆச்சர்யப்பட்டு பேசுமளவிற்கு தற்போது ஆகிவிட்டது.."படம் எடுப்பதில் இருக்கிற சிரமத்தை விட அதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிவிட வேண்டும் என்பதே பெரிய சிரமமான ஒன்றாக இருக்கிறது" என்று விஜயையே பேச வைத்துவிட்டார்கள் நம்மவர்கள்...
அழகிய தமிழ்மகனில் ஆரம்பித்த இந்த சர்ச்சைகள் தற்போது சர்கார் வரை, விஜயை விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது..அழகிய தமிழ் மகன் படத்தின் 25 சதவீதம் முடிந்திருந்த நிலையில் படப்பிடிப்பிற்கு, எம்.எஃப்.ராஜா என்ற தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கின் காரணமாக நான்கு வாரங்கள் தடை விதிக்கப்பட்டது..காவலன் திரைப்படத்தின் போது, "சுறா" திரைப்படத்தின் தோல்விக்கு நஷ்ட ஈடு கோரி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் "காவலன்" படத்தை வெளியிட மறுத்து போர்க்கொடி உயர்த்தினார்கள்.. 
அதுமட்டுமில்லாமல் காவலன் திரைப்படத்திற்கு உரிமம் கேட்டு "கோகுலம் சிட் ஃபண்ட்ஸ்" எனும் நிறுவனம் வழக்கு தொடுத்தது...  

"துப்பாக்கி", அந்த படத்தின் தலைப்புக்காக கள்ளத்துப்பாக்கி என்னும் படக்குழுவினரால் படத்தை தடைசெய்யக் கோரி ஒரு வழக்கு தொடரப்பட்டது...  இசுலாமிய அமைப்புகள் தங்களை தவறாக சித்தரித்துள்ளதாக ஒரு வழக்கை பதிவு செய்தன..."தலைவா"-வில் "Time To Lead" என்று கேப்சன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்தது. மேலும் அந்த படம் வெளியாவதற்கு முன்னமே திருட்டு விசிடியில் வெளிவந்த கொடுமையும் தலைவாவுக்கு நடந்தது...துப்பாக்கி படத்திற்கு அடுத்து இரண்டாவது முறையாக முருகதாஸுடன் விஜய் கைகோர்த்த "கத்தி" யும்  சர்ச்சைக்கு தப்பவில்லை... முழுக்கதையும் தன்னுடையது என்று ஒருவர் நீதிமன்றத்திற்குப் போக படாதபாடுபட்டுப் போனார்கள் விஜயும், முருகதாஸும்...வரிசையாக இப்படி சிக்கித் தவித்த விஜய் படங்களில் "புலி" ஒருபடி மேலே போய், வருமான வரி சோதனை அளவிற்கு போய் நின்றது.. வழக்கமாக படத்தில் பேசுகிற அரசியல் வசனங்களுக்காகவே பழிவாங்கப்படுகிறார் என்று வெளியே பேசிக் கொண்டதும் நடந்தது... அதோடு இல்லாமல் தயாரிப்பு தரப்பு பிரச்சனைகளுக்காக படம் காலதாமதமாகவே வெளியானது...

அட்லீயும் விஜயும் முதல் முறையாக இணைந்த "தெறி"யும் சர்ச்சையில் இருந்து தப்பவில்லை .... செங்கல்பட்டு பகுதியில் 60 திரையரங்குகளுக்கு மேலாக படம் தாமதமாகவே வெளியானது.. தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்குமே பிரச்சனையாக இருந்தாலும் இதுவும் விஜயின் பிரச்சனையாகவேப் பார்க்கப்பட்டது..இதே போல மெர்சல் படத்தின் போது, விஜய்க்கு புதிய சிக்கலாக படத்தின் தலைப்பிற்கு உரிமை கொண்டாடி ஒருவர் வழக்கு தொடுக்க, தலைப்பை பயன்படுத்த தடை விதித்து பின் தலைப்பைப் பயன்படுத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது..  மெர்சல் படத்தில் பேசப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்களால் பாஜக தரப்பில் இருந்து பல விமர்சனங்களை சந்தித்து மெர்சல் திரைப்படம்..தற்போது, தீபாவளிக்கு வெளியாகியுள்ள சர்கார் திரைப்படமும் பிரச்சினைகளில் இருந்து மீளவில்லை.. முதலில் கதை திருடப்பட்டதாக உதவி இயக்குநர் வழக்கு தொடர்ந்து பின்னர் பிரச்சினை ஒருவராக தீர்ந்தது..  தொடர்ந்து படத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதாக கூறி, அதை நீக்கக்கோரி அதிமுகவினர் பல திரையரங்குகளிலும் போராடி வருகின்றனர்.. விஜயின் படம் இன்னும் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Next Story

மேலும் செய்திகள்