வீரமாதேவியில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்பு

வீரமாதேவி திரைப்படத்தில் நடிகை சன்னிலியோன் நடிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வீரமாதேவியில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்பு
x
சோழ பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி, சிறந்த போர் வீராங்கனையாக இருந்தவர்.  இவரது வாழ்க்கை வரலாற்றை, 'வீரமாதேவி' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வருகின்றனர். இதில், வீரமாதேவி வேடத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். இந்நிலையில், செல்லூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆபாச படங்களில் நடித்துள்ள சன்னிலியோன், வீரமாதேவி வேடத்தில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், சன்னிலியோனை நீக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்