எப்படி இருக்கிறது '96' படம்..?

சி.பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா, நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் '96'. இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.
எப்படி இருக்கிறது 96 படம்..?
x
ராமசந்திரன் (விஜய் சேதுபதி), ஜானு(த்ரிஷா) இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பத்தாவது படிக்கிறார்கள். இருவருக்குமே உள்ளுக்குள் காதல். ஜானகி தனக்குள் இருக்கும் காதலை அவ்வப்போது வெளிக்காட்டி கொண்டாலும், ராமச்சந்திரனுக்கு அதை வெளிக்காட்ட பயம். 


எதிர்பாராத காரணங்களால் பள்ளிப்பருவத்திலேயே இருவரும் பிரிந்து விடுகின்றனர். மீண்டும் 22 வருடங்களுக்குப்பின் ஸ்கூல் ரீ-யூனியன் சந்திப்பில் இருவரும் சந்திக்கின்றனர். மீண்டும் சந்தித்துக் கொண்ட இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்ன காரணங்களால் இருவரும் பிரிந்தனர்? என்பதே '96' படத்தின் கதை.



டிராவல் போட்டோகிராபராக விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதம். சிம்பிளான தோற்றத்தில் அனைவரையும் கவர்கிறார் த்ரிஷா. 22 வருடங்களுக்குப்பின் இருவரும் பேசிக்கொள்வது மற்றும் ஒருவரைப் பற்றிய மற்றவரது நினைவுகள், இருவருக்கும் இடையிலான பிளாஷ்பேக் காட்சிகள் படத்தின் கூடுதல் பலம். படத்தின் முதல் பாதியில் வரும் ஸ்கூல் தொடர்பான காட்சிகள் நம்மை அந்த தருணத்துக்கே அழைத்து சென்று விடுகின்றன. பாடல்கள் படத்தில் சரியான இடத்தில் இடம்பெறுகின்றன. குறிப்பாக காதலே காதலே பாடல் ஒன்ஸ்மோர் ரகம்.



ஆனால் பிளாஸ்பேக்கில் சில ட்விஸ்ட்கள் அலுப்பை ஏற்படுத்துகிறது. இடைவெளிக்கு பின்னர் வரும் விஜய் சேதுபதி - த்ரிஷா பேசி கொள்ளும் காட்சிகள் கொஞ்சம் போர். மொத்தத்தில் 96 படத்தை விஜய் சேதுபதி - த்ரிஷா கூட்டணி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்