எப்படி இருக்கிறது "ராஜா ரங்குஸ்கி"...?
பதிவு : செப்டம்பர் 22, 2018, 11:55 AM
மாற்றம் : செப்டம்பர் 22, 2018, 11:59 AM
"மெட்ரோ" சிரிஷ் - சாந்தினி நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில், "பர்மா ", "ஜாக்சன்துரை" படங்களை இயக்கிய தரணிதரன "ராஜா ரங்குஸ்கி்" படத்தை இயக்கி உள்ளார்.
போலீஸ் ரைட்டருக்கு., ஒரு பெண் ஸ்டோரி ரைட்டர் மீது பார்த்தவுடன் காதல். போலீஸ் ரைட்டரான ஹீரோ தான் நேசிக்கும் பெண்ணை காதலிக்க வைக்க இன்னொரு மொபைல் நம்பர் மூலம வேற வாய்ஸில் பேசி ஹீரோயின் உடன் ஒரு விளையாட்டு விளையாட அதுவே அவருக்கு வினையாக அமைகிறது. ஹீரோவின் வாய்ஸில் ஒருவர் பேசுகிறார். பல கொலைகளை செய்து ஹீரோவை மாட்டி விடுகிறார். யாரு அந்த வில்லன் என்று தெரியாமல் திணறும் ஹீரோ. போலீஸ் ஹீரோவை துரத்தி பிடித்து ,குற்றவாளி ஆக்கி கூண்டில் அடைக்கப் பார்க்கிறது. ஆனால்,அவர்களிடமிருந்து தப்பித்து ,தன் வாய்ஸில் பேசும் நபர் யார்? என்று தெரிந்து கொண்டாரா? அந்த நபர் தான் கொலையாளியா? குற்றவாளியா..? என்பதை வித்தியாசமாக சொல்லி இருக்கிறது இந்த "ராஜா ரங்குஸ்கி" திரைப்படம்.மெட்ரோ "சிரிஷ்" பயம் கலந்த சந்தேக பார்வை என இளம் கான்ஸ்டபில்களுக்கே உரிய லுக்கில் சிறப்பாக நடித்துள்ளார்.  பெண் எழுத்தாளராக வரும் கதாநாயகி சாந்தினிக்கு இந்த திரைப்படம் அவர் படங்களில் ஒரு மயில்கல். யுவன் சங்கர் ராஜா இசையில் அவரே பாடியுள்ள "பட்டுக்குட்டி... " , "ஷேடோ தீம்"  நடிகர் எஸ்டி ஆர் பாடியுள்ள "மிஸ்டர் எக்ஸ் .." மேலும், "காதல் கானா ...", "கிப்ட் ஆப் லைப் ..." உள்ளிட்ட பாடல்களும் , பின்னணி இசையும் இந்த கிரைம் திரில்லர் படத்திருக்கு பெரிய பலம்.. குற்றவாளி யார் என்று கடைசிவரை யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை நகர்த்தியுள்ளார் இயக்குனர் தரணிதரன். சில பாடல் காட்சிகள் கதை சுவாரஸ்யமாக போகும்போது வேகத் தடையாக உள்ளது.

பிற செய்திகள்

அபிசரவணன் - அதிதி மேனன் திருமணம் செய்த காட்சி வெளியீடு...

நடிகர் அபிசரவணனை திருமணம் செய்யவில்லை என நடிகை அதிதி மேனன் கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

444 views

மங்காத்தா-2 வருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மங்காத்தா-2' படத்தை எடுக்கும்படி ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் வற்புறுத்தி உள்ளனர்

53 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

1364 views

ஓவியாவின் '90 எம்.எல்' தள்ளிப் போகிறது

நடிகை ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் '90 எம்.எல்' திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

107 views

பிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்

நடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்

82 views

நல்ல காதலரைத் தேடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா

"காக்கா முட்டை" புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமது காதல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

411 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.