எப்படி இருக்கிறது ‘பியார் பிரேமா காதல்’ ?

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரெய்சா, நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு, முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை தயாரித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
எப்படி இருக்கிறது ‘பியார் பிரேமா காதல்’ ?
x
காதலித்து கல்யாணம் செய்யும் விரும்பும் ஸ்ரீகுமார் (ஹரீஷ் கல்யாண்), காதல் திருமணமே பிடிக்காத அவரின் பெற்றோர்கள். ஒரு கனவோடு வாழும் சிந்துஜா (ரெய்சா), அதை நிறைவேற்ற துடிக்கும் அவரது அப்பா. இவர்களை சுற்றி தான் கதை நகர்கிறது. வழக்கம் போல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல். நண்பர்களாக பழகி பிறகு காதலர்களாக மாறுகிறார்கள். ஆனால் தன் கனவுகள் நிறைவேறும் முன் கல்யாணம் செய்ய முடியாது என்று சிந்துஜா கண்டிப்பாக சொல்ல, திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார்கள். 

இணைந்து வாழும் போது சண்டை. மனக்கசப்பு. பிரிந்து விடுகிறார்கள. சிந்துஜா மேலுள்ள கோபத்தில், வீட்டில் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்ய ஒப்புக் கொள்கிறார் ஸ்ரீகுமார். இந்த செய்தியைக் கேட்ட சிந்துஜா, தன் கனவுப் பயணத்தை நோக்கிய வேலைகளை தீவிரப்படுத்துகிறாள். 

இவர்கள் மீண்டும் இணைந்தார்களா இல்லையா? என்பதுதான் இந்த நவநாகரீக காதல் கதை. இறுதி கட்டத்தில் வரும் எதிர்பாராத திருப்பங்களை அழகாக நகர்த்தியுள்ளார் இளம் இயக்குனர் இளன். படத்தின் பலமே யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான். மொத்தம் 12 பாடல்கள். "ஏ பெண்ணே" பாடல் இளைஞர்களிடம் செம ஹிட். முனீஸ்காந்த் வரும் காட்சிகளில் திரையரங்கில் சிரிப்பு மழை. ராஜா ராணி படத்தில் சத்யராஜ் போல, அப்பா வேடத்தில் வரும் நடிகர் ஆனந்த் பாபுவின் நடிப்பு அருமை. விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி போன்ற காதல் படங்கள் வரிசையில், தற்போது "பியார் பிரேமா காதல்".

Next Story

மேலும் செய்திகள்