விஸ்வரூபம் 2 - படத்துக்கு தடை கோரி வழக்கு : சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் 2 - படத்துக்கு தடை கோரி வழக்கு : சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை
x
விஸ்வரூபம் 2  படத்தை வெளியிட தடை கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,2008ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தங்க​ள் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பப்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 6 கோடியே
90 லட்சம் ரூபாயும், கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள
நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும், 

மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளத்தை கமல்ஹாசன் வட்டியுடன் திருப்பி கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதித்தால்,தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என  பிரமிட் சாய்மீரா நிறுவனம் மனுவில் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்