'குயின்' ரீ மேக்' 4 மொழிகளில் அக்டோபர் மாதம் வெளியீடு

கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் வெளியான 'குயின்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம், தற்போது 4 தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
குயின் ரீ மேக் 4 மொழிகளில் அக்டோபர் மாதம் வெளியீடு
x
கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் வெளியான 'குயின்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம், தற்போது 4 தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் 'பாரிஸ் பாரிஸ்', தெலுங்கில் 'தட்ஸ் மகாலட்சுமி', கன்னடத்தில் 'பட்டர் ப்ளை', மலையாளத்தில் 'ஜாம் ஜாம்' என உருவாகும் இந்த 4 படங்களையும் அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில், தமிழில் காஜல் அகர்வாலும் தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்,கன்னட படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

Next Story

மேலும் செய்திகள்