விஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு
விஜய் சேதுபதி புகாருக்கு பசுமை தாயகம் விளக்கம்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் புகை பிடிப்பதை மட்டும் எதிர்க்காமல், புகையிலை கம்பெனிகளுக்கும் எதிராக குரல் கொடுத்தவர் டாக்டர் அன்புமணி என பசுமை தாயகம் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, பசுமை தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் புகைக்க தடை, எச்சரிக்கை படம், குட்கா-பான் மசாலாவுக்கு முழு தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் டாக்டர் அன்புமணியின், முயற்சியால் விளைந்த நன்மைகள் என்று பட்டியலிட்டுள்ளது. மேலும், புகை பிடிப்பது குறித்து டாக்டர் அன்புமணி குரல் கொடுக்கவில்லை என, புகார் சொல்லும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பொது அறிவு இல்லை என்றும் பசுமை தாயகம் அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
Next Story