விஸ்வரூபத்துடன் மோதும் கோலமாவு கோகிலா
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இதில், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 10-ம் தேதி கோலமாவு கோகிலா திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நயன்தாராவின் படமும் அதே நாள் வெளியாக இருப்பதால், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் ஒரு மோதலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story

