சின்னத்திரை - யாருக்கு எவ்வளவு சம்பளம்?
சின்னத்திரையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் ஊதியம் என்ன, அவர்களுக்கு அத்துறையால் கிடைக்கும் இதர பலன்கள் என்ன என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்...
சின்னத்திரையில் புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்களின் ஊதியம் முதலில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்று கூறப்படுகிறது.
இவர்களின் வேலை நேரம் 12 மணி நேரம். அன்று படப்பிடிப்புக்கு வந்து அவர்களுக்கான காட்சிகள் இல்லையென்றாலும் பேசப்பட்ட ஊதியம் கொடுக்கப்பட்டு விடுவதாகச் சொல்கிறார்கள்.
பணிக்கு வர இவர்களுக்கு வாகன வசதிகள் தரப்படாது. ஆனால் போக்குவரத்து படி கொடுக்கப்படும் என்கிறார்கள்.
சினிமாவில் இருந்து வரும் பிரபலங்களுக்கு சின்னத்திரையில் கணிசமான சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. ராதிகா, தேவயாணி போன்ற பிரபலங்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்கிறார்கள்.
இரண்டாம், மூன்றாம் கட்ட நடிகைகளாக சினிமாவிலிருந்து வருபவர்களுக்கு 25 ஆயிரம் முதல் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. சீனியர் நடிகைகளுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாகன வசதி செய்து கொடுக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
இன்னொரு பக்கம் பல நிறுவனங்கள் குறித்த நேரத்தில் சம்பளம் தருவதில்லை எனவும், ஊதியமே வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சின்னத்திரை சங்கத்திடம் புகார் குவிந்து வருவருவதாகவும் சொல்கிறார்கள்.
Next Story

