இன்று நடிகர் கோட்டா சீனிவாசன் பிறந்த நாள்

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...
இன்று நடிகர் கோட்டா சீனிவாசன் பிறந்த நாள்
x
நடிகர் கோட்டா சீனிவாசன் பிறந்த நாள் இன்று

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த கோட்டா சீனிவாச ராவின் தந்தை ஒரு டாக்டர். தந்தையை போல டாக்டராகும் விருப்பம் இருந்தாலும், நடிப்பின் மீதான ஆசையால், Pranam Khareedu என்ற தெலுங்கு படத்தில் 1978ம் ஆண்டு அறிமுகமானார். பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் அறிமுகமானது 2003ம் ஆண்டில்தான்... 

சாமி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்த அவர், திருப்பாச்சி,  குத்து, கோ, சகுனி என 30க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். சந்தானத்துடன் நடித்த ஆல் இன் ஆல் அழகு ராஜா, மரகத நாணயம் போன்ற படங்களில் அவரது கலகலப்பு நடிப்பு... சிரிப்பு மத்தாப்பு...சிறந்த நடிப்புக்காக ஆந்திர அரசு வழங்கும் 'நந்தி விருதை' ஒன்பது முறை பெற்றதோடு, பத்ம ஸ்ரீ உள்ளிட்டட விருதுகளையும் கோட்டா சீனிவாச ராவ் பெற்றிருக்கிறார். ஆந்திர சட்டப்பேரவையில் பா.ஜ.க. சார்பாக 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்திருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்