"சர்கார்" படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போல் வெளிவந்த காட்சி நீக்கம்

பொது சுகாதாரத்துறை நோட்டீசை தொடர்ந்து "சர்கார்" படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போல் வெளிவந்த காட்சி நீக்கம்.
சர்கார் படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போல் வெளிவந்த காட்சி நீக்கம்
x
சர்கார் - புகைப்பிடிக்கும் காட்சி நீக்கம்

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் 'சர்கார்'. இந்த படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் ஆகியவை சமீபத்தில் வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலரும் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே, சிகரெட் பிடிப்பது போல விஜய் தோன்றும் காட்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சியை சமூக வலைதளத்தில் இருந்து அகற்றுமாறு விஜய், இயக்குனர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளருக்கு சுகாதாரத் துறை  சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து "சர்கார்" படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போல் வெளிவந்த காட்சி நீக்கம் செய்யப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்