பன்முக திறமை கொண்ட பால முரளி கிருஷ்ணா பிறந்த தினம்

ஜூலை 06 - பால முரளி கிருஷ்ணா பிறந்த தினம், ஏறத்தாழ 25 ஆயிரம் கச்சேரிகள், 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமை.
பன்முக திறமை கொண்ட பால முரளி கிருஷ்ணா பிறந்த தினம்
x
ஆந்திராவில், சங்கர குப்தம் எனும் ஊரில், 1930,  ஜூலை 6ம் தேதி, பாலமுரளி கிருஷ்ணா பிறந்தார். இவரது தந்தை பட்டாபிராமையா, புல்லாங்குழல் வித்வான். தாயார் சூர்ய காந்தம்மா, வீணை வாசிப்பாளர்... தியாகராஜர் மாணவர் பரம்பரையில், 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை இவருக்குண்டு.  2006ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அன்று, குவைத்தில் பாலமுரளிகிருஷ்ணா கச்சேரி நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது 76.

சுமார் 25 ஆயிரம் கச்சேரி நடத்தியுள்ளார். 8 மொழிகளில் பாடல் பாடும் திறமை கொண்டவர். மகதி, சர்வஸ்ரீ, ஓம்காரி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்ற ராகங்களை, இவர் உருவாக்கினார்."பக்த பிரகலாதா" திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக, திரையுலகில் அறிமுகமானார். இவர், ''சதி சாவித்திரி'' எனும் தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். ''பசங்க'' திரைப்படத்திலும் பால முரளி கிருஷ்ணா ஒரு பாடல் பாடியிருப்பார். ''பிரபா'' என்ற படத்தில் இவர் பாடிய பாடல், கடைசி பாடலாகும்.  

ஆதி சங்கராச்சாரியா, மற்றும் ராமானுஜார்யா, மத்வச்சாரியா திரைப் படங்களுக்கு, இவர் இசையமைத்துள்ளார்.அதிசய ராகம்... ஆனந்த ராகம்... எனும் பாடல் மகதி ராகத்தில் உருவானது. 1971ம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 1991ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்ற பால முரளி கிருஷ்ணா, கணக்கில் அடங்கா விருதுகளைப் பெற்றுள்ளார். காலத்தால் அழியாத ராகங்களைத் தந்த பாலமுரளி கிருஷ்ணா, உடல் நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்