ஜூலை 06 - பால முரளி கிருஷ்ணா பிறந்த தினம்

தியாகராஜர் மாணவர் வரிசையில் - 4 ஆவதாக வந்தவர்
ஜூலை 06 - பால முரளி கிருஷ்ணா பிறந்த தினம்
x

ஆந்திராவின்  கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில், ஜூலை 6ம் தேதி, 1930ம் ஆண்டு பாலமுரளி கிருஷ்ணா பிறந்தார். இவரது தந்தை பட்டாபிராமையா ஒரு புல்லாங்குழல் வித்வான். தாயார் சூர்ய காந்தம்மா, வீணை வாசிப்பாளராவார்... தியாகராஜர் மாணவர் பரம்பரையில், 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை இவருக்குண்டு. ஒன்பதாவது வயதில் இசைக் கச்சேரி, 11 வயதில் ஒன்றரை மணி நேரம் பாடியுள்ளார்.இவர், முதன்முதலாக தமது ஒன்பதாவது வயதில் இசைக் கச்சேரி செய்து, ''இசை மேதை'' எனப் பெயர் பெற்றார். அப்போது சேர்ந்து கொண்ட 'பால' எனும் பட்டத்தால், பால முரளி கிருஷ்ணா ஆனார். அப்போது, சென்னை வானொலி நிலையம்,  தமது முதல்தர இசைக் கலைஞர் பட்டியலில், இவரைச் சேர்த்தது.

திருவையாறு தியாகராஜ சுவாமி உற்சவத்தில், இவர் தமது 11 வயதில், ஒன்றரை மணி நேரம் பாடியுள்ளார். 2006ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அன்று, குவைத்தில் பாலமுரளிகிருஷ்ணா கச்சேரி நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது 76. ஏறத்தாழ 25 ஆயிரம் கச்சேரிகள் 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமை தென்னிந்திய மொழிகளில் பிரபலமான பாடல். சுமார் 25 ஆயிரம் கச்சேரிகளை உலகம் முழுவதும் நிகழ்த்தியுள்ளார். 8 மொழிகளில் பாடல் பாடும் திறமை கொண்ட இவர், வயலின், புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் இசைக்கும் திறனும் கொண்டவராக இருந்தார். மகதி, சர்வஸ்ரீ, ஓம்காரி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்ற ராகங்களை, இவர் உருவாக்கினார்.

"பக்த பிரகலாதா" தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக, திரையுலகில் அறிமுகமானார். ஆனால், 
அதற்குப் பின்னர் வந்த வாய்ப்புகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற்காலத்தில், ''சந்தினே செந்தின சிந்தூரம்'' எனும் மலையாளத் திரைப்படத்தில் பாடகர் வேடத்தில் நடித்தார். இவர், ''சதி சாவித்திரி'' எனும் தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். ''சுவாதித் திருநாள்'' மலையாளத் திரைப்படத்தில் இவரது பாடலுக்கு, கேரள அரசின் விருது  கிடைத்தது. ''பசங்க'' திரைப்படத்திலும் பால முரளி கிருஷ்ணா ஒரு பாடல் பாடியிருப்பார். ''பிரபா'' என்ற படத்தில் இவர் பாடிய பாடல், கடைசி பாடலாகும்.  முதல் சமஸ்கிருத திரைப்படமான ஆதி சங்கராச்சாரியா, மற்றும் ராமானுஜார்யா, மத்வச்சாரியா திரைப் படங்களுக்கு, இவர் இசையமைத்துள்ளார்.

அதிசய ராகம்... ஆனந்த ராகம்... உருவாக்கியவர் கணக்கில் அடங்கா விருதுகளுக்கு சொந்தக்காரர். எம்.எஸ். விஸ்வநாதன், பாலமுரளிகிருஷ்ணாவை தமது இசையாசிரியராக கருதினார்; அபூர்வ ராகங்கள் படத்தில் இந்த பாடலுக்கு உறுதுணையாக இருந்தவர் பால முரளி கிருஷ்ணா தான்.1971ம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 1991ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்ற பால முரளி கிருஷ்ணா, கணக்கில் அடங்கா விருதுகளைப் பெற்றுள்ளார். காலத்தால் அழியாத ராகங்களைத் தந்த பாலமுரளி கிருஷ்ணா, உடல் நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்