வசூலை குவிக்கும் 'ஜூராசிக் வேர்ல்ட்'
ஆயிரத்து 15 கோடிகளை வசூல் செய்து ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் தொடர்ந்து முதலிடம்
ஹாலிவுட் படங்களின், இந்த வார பாக்ஸ் ஆபிசில், ஆயிரத்து 15 கோடிகளை வசூல் செய்துள்ள ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் திரைப்படம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அனிமேஷன் படமான incredibles 2 உள்ளது.
இந்த வார முடிவில் இந்த படம் 322 கோடிகளை வசூல் செய்துள்ளது. அடுத்த இரு இடங்களில் "Sicario: Day of the Soldado" மற்றும் "Uncle Drew" படங்கள் 109 கோடியும் ,96 கோடியும் வசூல் செய்துள்ளன. ஐந்தாவது இடத்தில், 54 கோடிகளை வசூல் செய்துள்ள oceans 8 திரைப்படம் உள்ளது.
Next Story