அரை நூற்றாண்டை கடந்து நிற்கும் திருச்சி 'கெயிட்டி' தியேட்டர்

அரை நூற்றாண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிகரமாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது திருச்சியின் பழமையான தியேட்டர்களில் ஒன்றான 'கெயிட்டி' தியேட்டர்!
அரை நூற்றாண்டை கடந்து நிற்கும் திருச்சி கெயிட்டி தியேட்டர்
x
இணையத்தில் சுடச்சுட புதுப்படங்கள் ரிலீஸ், மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள் மூடல் என, தமிழ் திரையுலமே தள்ளாடி வரும் நிலையில், மூன்றாம் தலைமுறையாக கார்பன் குச்சியை எரித்து படம் காட்டி வருகிறது திருச்சியில் உள்ள ஒரு தியேட்டர்.

திருச்சி சிங்காரத்தோப்பு காமராஜர் வளைவுக்கு அருகில் பழமையின் அடையாளமாக கம்பீரமாக நிற்கிறது 'கெயிட்டி' தியேட்டர்.

1960-70களில் மிகப் பிரபலமாக இருந்த இந்த தியேட்டரில் தற்போது வாரத்திற்கு ஒரு பழைய திரைப்படம் திரையிடப்படுறது. ஜெமினி கணேசன்- கே.ஆர். விஜயா நடித்த குறத்தி மகன் படம் கடந்தவாரம் திரையிடப்பட்டிருந்தது.

பகல் காட்சியில் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே திரையரங்கில் ரசிகர்கள் உட்கார்ந்திருக்கின்றனர். முதல் வகுப்பு கட்டணம் முப்பது ரூபாய், இரண்டாம் வகுப்பு கட்டணம் இருபத்தைந்து ரூபாய், மூன்றாம் வகுப்பு கட்டணம் இருபது ரூபாய் என கட்டணம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. மொத்தம் 375 இருக்கைகள் இருக்கின்றன.

ஒரு காலத்தில் ஹிந்தி படங்களும், எம்ஜிஆர், சிவாஜி படங்களும் நூறு நாட்களை தாண்டி ஓடிய கெயிட்டி தியேட்டர், அந்நாட்களில் திருச்சியின் முக்கிய அடையாளமாகவே பார்க்கப்பட்டது.

தற்போதும் பழைய படங்களுக்கு ரசிகர்கள் குறையவில்லை. புதுப்படங்கள் ஓடும் தியேட்டர்களே காற்று வாங்கும் நிலையில், ஒரு காட்சிக்கு நூறு பேருக்கும் குறையாமல் படம் பார்க்க வருவதாக தெரிவிக்கின்றனர், திரையரங்க நிர்வாகிகள்.

Next Story

மேலும் செய்திகள்