20 நிமிடங்கள் கட் - விக்ரமின் 'கோப்ரா' படக்குழு திடீர் முடிவு

20 நிமிடங்கள் கட் - விக்ரமின் கோப்ரா படக்குழு திடீர் முடிவு
x


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோப்ரா'.

டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து டைரக்‌ஷனில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

நடிகர் விக்ரம் 9 கெட்டப்புகளில் நடித்துள்ள இப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருது.

இப்படத்தின் நீளம் 3 மணி நேரம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதை கவனித்த படக் குழுவினர், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று படத்தின் நீளத்தில் 20 நிமிடங்கள் குறைத்து இருக்கிறார்கள்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஒரு அறிக்கையாக படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்