Vellore | Busstand| பஸ் ஸ்டாண்ட் அருகே சுட்டுக்கொலை.. வேலூரில் பெரும் பதற்றம்

Vellore | Busstand| பஸ் ஸ்டாண்ட் அருகே சுட்டுக்கொலை.. வேலூரில் பெரும் பதற்றம்

#velloreissue #vellorelatestnews வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி ஒருவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஞானவேல் மற்றும் அவரது நண்பர் ரகு ஆகியோர் பேருந்து நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் என்பவன், தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் இருவரையும் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் மார்பு மற்றும் தலையில் குண்டு பாய்ந்த ஞானவேல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ரகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பூவரசனை உடனடியாகக் கைது செய்த குடியாத்தம் தாலுகா போலீசார், அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X