India vs Zimbabwe | ஜிம்பாப்வேவை தட்டி தூக்கிய இந்தியா..அதிரடியான வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றித் தொடரை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 81 ரன்கள் விளாசி இந்திய அணியின் சிறப்பான ஸ்கோருக்கு வித்திட்டார். தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திக் கட்டுப்படுத்தினர். சிறப்பாக பந்துவீசிய மயாங்க் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது
