74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக திரையிடலுக்கு "கொட்டுக்காளி" திரைப்படம் தேர்வாகி உள்ளது.இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அதில், நமது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக்கிய கொட்டுக்காளி திரைப்படம் 74 ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகியுள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். இயக்குனர் வினோத் ராஜ், சூரி மற்றும் படக்குழுவினருக்கு, பாராட்டுக்கள் என குறிபிட்டுள்ளார். மேலும், பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்தியேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் நமது கொட்டுக்காளி என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கே அனைத்து பெருமையும் சேரும் என சிவகார்த்திகேயன் என தெரிவித்துள்ளார்.