டி-20 தொடரை வெல்லுமா இந்திய அணி? - ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை

டி-20 தொடரை வெல்லுமா இந்திய அணி? - ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை
x

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று, ஒன்றுக்கு ஒன்று என தொடர் சமநிலையில் உள்ளது. இதனால் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டு அணிகளும் போராடும் என்பதால், இன்றைய போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில், இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்