முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? - இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி | Ind vs Aus

x
  • இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
  • இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது.
  • இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.
  • தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது.
  • இதனால் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். அதேபோன்று கம்மின்ஸ் இல்லாததால், ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்க உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்