டிரம்ப் தொடங்கிய `புது போர்’ - உலக நாடுகளையே அதிர வைத்த அறிவிப்பு
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் மற்றும் தென் கொரியா பொருட்களுக்கு 25 சதவீதம் புதிய வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்க உள்ள புதிய வரிகள் தொடர்பாக தாம் கையெழுத்திட்ட கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதில் இரண்டு கடிதங்களை தனது சமூக வலைதளமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ளார். சீனாவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய இருநாடுகளும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளாக பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த புதிய வரி விதிப்பால் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் வாகனம் மற்றும் மின்னணு தொழில்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
