காசாவை குறிவைத்த அமெரிக்கா - டிரம்ப் தடாலடி அறிவிப்பு
காஸா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா சென்றடைந்தார். வெள்ளை மாளிகையில் ஆலோசனைக்குப்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் டிரம்ப், தேவைப்பட்டால் காஸா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, தங்கள் ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் என்று தெரிவித்தார். காஸா பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் மற்றும் அழிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றி, வீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
Next Story