சிக்கி தவிக்கும் 13 பேர்.. கதறி துடிக்கும் குடும்பத்தினர் | Srilanka | fisher man
இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க்கோரி, அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சிறைப் பிடித்தனர். அவர்களில், 2 பேர் காயம் அடைந்த நிலையில், அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், மீனவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story