அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்

x

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 7 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக ஆய்வுகள் சொல்ல முதல்கட்டமாக 18 ஆயிரம் பேரை வெளியேற்ற அந்நாட்டு அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த சூழலில் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் புறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. C-17 விமானம் ஒன்று சட்ட விரோத குடியேறிகளோடு இந்தியாவிற்கு புறப்பட்டுவிட்டது, ஆனால் குறைந்தது 24 மணிநேரத்திற்குள் விமானம் இந்தியாவிற்கு வராது என்று அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்