Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-12-2025) | 6PM Headlines | Thanthi TV

x
  • தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும், வளர்ச்சியின் ஒளி பெருகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...AIIMS வராது, MetroRail தராது, கீழடி ஆய்வறிக்கையை மறைப்பதுதான் பாஜக பேசும் அரசியல் என்றும் சாடியுள்ளார்....
  • திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், சிலர் அரசியல் லாபத்திற்காக பிளவுகளை உண்டாக்குவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்... வன்முறையை தூண்ட நினைப்பவர்களை, மதுரை மக்கள் அடித்து விரட்டுவார்கள் என்றும், அமைதியை நிலைநாட்டிய மக்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
  • திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை எனக்கூறி சென்னை கோயம்பேட்டில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர்... சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்ததால் பரபரப்பான சூழல் நிலவியது...
  • திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை கண்டித்து நெல்லை, சங்கரன்கோவில், கோவை, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்...முருக பக்தர்கள் அவமதிக்கப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது...
  • நாடு முழுவதும் 6வது நாளாக தொடரும் இண்டிகோ விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்...முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது...
  • விமான சேவை பாதிப்புக்கான காரணம் குறித்து 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ்...
  • வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு...நாடாளுமன்ற மக்களவையில் நாளை சிறப்பு விவாதம் நடைபெறுகிறது...
  • ஈரோட்டில் வரும் 16 ஆம் தேதி விஜய் தலைமையில் நடைபெறும் தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்... விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மாற்று இடத்தையும், காவல்துறையிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
  • கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது 2026 தேர்தலில் தெரிய வரும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.... ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஈபிஎஸ், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என தெரிவித்திருந்த கருத்திற்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்....
  • தஞ்சை - பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் +2 மாணவர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்...பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு வளர்வதற்கு பதில், வன்முறை போக்கு வளர்ந்து வருவதாக கடுமையாக சாடியுள்ளார்...
  • கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்வரும் 13ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...சென்னையில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
  • கோவா நைட் கிளப் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் தலா 2 லட்சம் ரூபாயும் கோவா அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளத

Next Story

மேலும் செய்திகள்