இரவில் ஒற்றை தந்தத்துடன் வலம் வரும் காட்டு யானை | அச்சத்துடன் மக்கள்
ஒற்றை தந்தத்துடன் சாலையில் வலம் வரும் காட்டு யானை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கோமுட்டி ஏரி மலைப்பகுதியில் ஒற்றைத் தந்தத்துடன் காட்டு யானை சுற்றி வருகிறது. இரவு நேரங்களில் உணவைத் தேடி சாலையை காட்டு யானை கடக்க முற்படுவதால் போளூர், ஆலங்காயம், திருப்பத்தூர், செங்கம் உள்ளிட்ட வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் செல்கின்றனர். மேலும் இந்த ஒற்றை யானை கண்ணில் குறைபாடுடன் நிலையில் சுற்றி வருகின்றது. இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தவில்லை என அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கூறுகின்றனர். அதேசமயம் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
