Tiruvannamalai | மகா பிரதோஷம் - நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.. தி.மலையில் திரண்ட பக்தர்கள்

x

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில், ஐப்பசி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. நந்தி பகவானுக்கு மஞ்சள் தூள், வீபூதி, குங்குமம், அபிஷேக தூள், மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் வண்ண மலர்களால் மாலைகள் சாற்றப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்