"510 ரூபா வாங்குன சரக்கு சார்.. இத எப்படி குடிக்கிறது'' - அழாத குறையாக புலம்பி தள்ளிய மதுப்பிரியர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அரசு மதுபானக் கடையில் வாங்கப்பட்ட 500 ரூபாய் மதிப்பிலான மது பாட்டிலில் பூச்சி கிடந்த சம்பவம் மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாட்றம்பள்ளி - வெள்ளநாயக்கனேரி செல்லும் சாலையில் உள்ள இந்த மதுக்கடையில் ஸ்ரீதர் என்பவர் 510 ரூபாய் கொடுத்து எம்.ஜி.எம் நிறுவனத்தின் மது பாட்டிலை வாங்கியுள்ளார்.. ஆனால் அதில் பூச்சி ஒன்று கிடந்த நிலையில் இதுகுறித்து கடை ஊழியர்களிடம் விசாரித்த போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தைக் கை காட்டியுள்ளனர்... கொடுக்கும் பணத்திற்கு தரமான மது கிடைப்பதில்லை என மதுப்பிரியர்கள் புலம்பித் தவிக்கின்றனர்...
Next Story
