தேனி இளைஞர் வீசிய தூண்டிலில் சிக்கிய சீன பெண்.. நாடு விட்டு நாடு பறந்த காதல் ஓவியம்
அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற தமிழ் இளைஞர், சீன பெண்ணை காதலித்து, தனது பூர்வீக ஊரான ஆண்டிபட்டிக்கு வந்து திருமணம் செய்துள்ளார். அம்மச்சியாபுரத்தை சேர்ந்த அமுதா - சரவணகுமாரி தம்பதி அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களது மகன் தருண்ராஜ், அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சீன பெண் சுனோ ஜூ என்பவரை காதலித்துள்ளார். அவர்களுக்கு இருவீட்டார் சம்மதத்துடன், மணமகனின் பூர்வீக ஊரான ஆண்டிப்பட்டியில் இந்து முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது. திருமணத்திற்கு இருவீட்டாரின் உறவினர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் இருந்து வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
Next Story