ஆட்டோ டிரைவர் தற்கொலை - போலீஸ் மீது குற்றச்சாட்டு

x

பொள்ளாச்சி அருகே ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீசிடம் ஆஜரான ஆட்டோ டிரைவர், தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து, ஆட்டோவில் கடத்திச் சென்று அவரது, நான்கரை சவரன் நகையை திருடிய வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில், ஆட்டோவை ஓட்டிய ஆனைமலை சுள்ளிமேட்டுப் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம், கோட்டூர் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை செய்த நிலையில், அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்திற்கு போலீஸே காரணம் எனக் குற்றம்சாட்டிய உறவினர்கள் ரமண முதலிபுதூர் அருகே திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்