தென்காசி - ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பெண் தற்கொலை
தென்காசி - ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிவகிரி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி பொன்ஆனந்தி, அரசு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த நிலையில், அவருக்கு ஆன்லைனில் விளையாடும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு, யாரும் இல்லாத போது பொன் ஆனந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பொன்ஆனந்தி தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லையென்றும், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்துவிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிவகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
